PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எது உயரமான சிகரம்
உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். உயரம் 29,030 அடி. இது சராசரி கடல்நீர் மட்டத்துக்கு மேல் உள்ளவற்றில் உயரமானதாக இருக்கலாம். பசிபிக் கடலில் ஹவாய் தீவில் உள்ளது 'மவுனா கியா' எரிமலை, இதன் உயரம் கடல்நீர் மட்டத்துக்கு மேலே 13,803 அடி. கீழே இதன் உயரம் 19,685 அடி. இரண்டையும்
சேர்த்தால் உயரம் 33,488 அடி. எவரெஸ்டை விட 4458 அடி அதிகம். உலகின் உயரமான எரிமலை 'மவுனா கியா' தான். இளமையான எரிமலையும் இதுதான். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகியது.
45 ஆயிரம் ஆண்டுக்கு முன் 'லாவா'வை வெளியிட்டது.

