PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முந்தைய உலகப்போர்
இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கினால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதல் உலகப்போர் 1914 ஜூலை 28 - 1918 நவ., 11 வரை ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை மையமாக வைத்து நடந்தது. 90 லட்சம் ராணுவ வீரர்கள், 80 லட்சம் மக்கள் பலியாகினர். இரண்டாம் உலகப்போர் 1939 செப்., 1 - 1945 செப்., 2 வரை பெரும்பாலான உலக நாடுகள் இடையே நடந்தது. 7 - 8.5 கோடி பேர் பலியாகினர். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஜப்பான், கொரியா தோல்வியடைந்தன. இரண்டு உலகப்போரின் போதும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது.
*******************