
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவ்வாயில் தேர்தல் ஏன்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவ.5ல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல் எப்போதும் நவ., மாத முதல் செவ்வாய் கிழமை நடத்தப்படுகிறது. இதற்காக 1845ல் சட்டம் இயற்றப்பட்டது. அக்காலத்தில் அமெரிக்காவின் பிரதானதொழில் விவசாயம். அக்., இறுதியில் அறுவடை முடிந்து விடும். இதன் பின் பனிக்காலம் தொடங்கிவிடும்.
இதனால் நவ., முதல் வாரத்தை தேர்வு செய்தனர். கிழமையை பொறுத்தவரை ஞாயிறு சர்ச் செல்வர். திங்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு சென்று ஓட்டளிப்பதற்கான பயண நாள். புதன் விவசாயிகளுக்கான சந்தை தினம். எனவே செவ்வாய் தேர்ந்தெடுக்கப்பட்டது.

