PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய நுகர்வோர் தினம்
வியாபாரத்தில் நுகர்வோரே எஜமான். நுகர்வோர் உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த டிச., 24ல் தேசிய நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அனைவருமே ஒரு விதத்தில் நுகர்வோர் தான். நுகர்வோரை வைத்து தான் வியாபார சந்தையே நடக்கிறது. நுகர்வோர் தங்களது அடிப்படை உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏமாறுவது தடுக்கப்படும். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமை பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும். குறைபாடுகளை எதிர்த்து போராடினால் தான் தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும்.