PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயரமான கட்டடம்
உலக அதிசயங்களில் ஒன்று எகிப்தின் 'கிசா பிரமிடு'.பொதுவாக 'பிரமிடுகள்' மறைந்த மன்னர்களின் உடல்கள், பொருட்கள் புதைக்கப்படுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இது கி.மு.,2560ல் குபு மன்னரால் கட்டப்பட்டது. இதை கட்டி முடிக்க 27 ஆண்டு ஆனது. எடை 50 லட்சம் டன். இதற்கு தேவையான கற்கள் 800 கி.மீ., துாரத்தில் உள்ள அஸ்வான் மலையில் இருந்து வெட்டி நைல் நதியில் படகு மூலம் கொண்டு வரப்
பட்டது. இதன் உயரம் 481 அடி. இந்த 'பிரமிடு'முழுவதும் மனிதனால் கட்டப்பட்ட உலகில் உயரமான கட்டடம் என்ற பெருமையை இன்றளவும் பெற்றுள்ளது.