PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுவை அறியும் கால்
உலகில் 15 ஆயிரம், இந்தியாவில் 1100 வகை வண்ணத்து பூச்சிகள் உள்ளன. சிறகடித்து பறக்கும் போது இதன் பல வண்ண நிறங்கள் நம்மை ஈர்க்கின்றன. இவை குளுமையான ஈரப்பதம் உள்ள இடங்களில் வாழும். பருவநிலை மாற்றம் காரணமாக பல வகைகள் அழியும் நிலையில் உள்ளன. செடிக்கு செடி தாவி, பூவில் உள்ள தேனை உறிஞ்சும் இவற்றுக்கு வாய் கிடையாது.
இதற்கு பதிலாக பிரத்யேக உறிஞ்சு குழல் உள்ளது. ஆனால் இந்த குழலுக்கு சுவை அறியும் தன்மை கிடையாது. எனவே வண்ணத்து பூச்சி தன் கால்களால் சுவையை அறிகின்றன.