PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வனவிலங்கு தினம்
உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்து உள்ளனர். 240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர். சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூமி, மனிதர்களுக்கு உதவும் வன விலங்குகள், தாவரங்களை பாதுகாக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 3ல் உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'வனவிலங்கு பாதுகாப்பு நிதி: மக்கள், பிரபஞ்சத்தில் முதலீடு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.