PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாற்றுத்திறனாளிகள் தினம்
உலகில் 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இது உலக மக்கள்தொகையில் 16 சதவீதம். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். உலகில் ஐந்தில் ஒரு பெண், பத்தில் ஒரு சிறுவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால், பல துறைகளிலும் முத்திரை பதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர அரசு, தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டும். அவர்களது உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச., 3ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.