PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச போக்குவரத்து
உலகில் பெரும்பாலான நாடுகளிலும் பஸ், ரயில் போக்குவரத்து வசதி உள்ளன. இதில் பயணிக்க கட்டணம் உண்டு. ஆனால் ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில் பஸ், ரயிலில் மக்கள் இலவசமாகவே பயணிக்கலாம். பொது போக்குவரத்தை அதிகரித்து, நெரிசலை குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடத்தில் இந்நாடு உள்ளது. பரப்பளவு 2586 சதுர கி.மீ. மக்கள் தொகை 6.72 லட்சம். தலைநகரம் லக்சம்பர்க் சிட்டி. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியை எல்லையாக கொண்டுள்ளது.