PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயற்கையை பாதுகாக்கும் புலிகள்
அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், பூடான், நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா, சீனா, தைவான், லாவோஸ், ரஷ்யா என 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது, காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது. உலகில் வாழும் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன.