
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளைஞர்கள், யானைகள் தினம்
* உலகில் பாதி பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இது 2030ல் 57% என அதிகரிக்கும். நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 12ல் சர்வதேச இளைஞர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வனப்பரப்பு குறைவது, உணவு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவை இதன் அழிவுக்கு காரணமாகிறது. ஆப்ரிக்கா, ஆசியாவில் தான் யானைகள் அதிகம். ஆசிய யானைகளில் 44 சதவீதம் இந்தியாவில் உள்ளன.