PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக முதியோர், சைவ தினம்
உலகில் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 1995ல் 54 கோடியாக இருந்தது. 2025ல் 120 கோடியாக உயர்ந்தது. இது 2050ல் 210 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., கணித்துள்ளது. உலகின் சராசரி ஆயுட்காலம் 2025ல் 73.5 வயது என உள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்குதல், பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. * காய்கறிகள் அடங்கிய சைவ உணவின் நன்மை, பலன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக். 1ல் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.