
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருமான வரி இல்லாத மாநிலம்
வடகிழக்கு மாநிலம் சிக்கிம். பரப்பளவில் கோவாவுக்கு அடுத்து இரண்டாவது சிறியது. இது 1975 மே16ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிக்கிம் மக்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு அரசியலமைப்பு சட்டம் விதி 371 (எப்), வருமான வரிச்சட்டம் -1961 பிரிவு 10 (26ஏஏஏ) வகை செய்கிறது. இதன்படி 1975க்கு முன் சிக்கிமில் பிறந்தவர்கள், அம்மாநிலத்துக்கு உள்ளேயே ஈட்டும் சம்பளம், விவசாயம், தொழில், வாடகை உள்ளிட்ட அனைத்து வருமானத்துக்கும், வருமான வரி கட்ட தேவையில்லை.

