PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஒளி, டெங்கு தடுப்பு தினம்
அமெரிக்க இயற்பியலாளர் தியோடர் மைமான் 1960 மே 16ல் லேசர் ஒளிக்கற்றையை இயக்கி சாதித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 16ல் உலக ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல துறைகளில் லேசர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. லேசர் (சீரொளி) என்பது ஒரே அதிர்வெண் கொண்ட, ஒரே வண்ணம் கொண்ட ஒளி. சாதாரண ஒளியைவிட பன்மடங்கு வலிமையானது.* ஏடிஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் மே 16ல் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
