/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உணவு பாதுகாப்பு அமைப்பு
/
தகவல் சுரங்கம் : உணவு பாதுகாப்பு அமைப்பு
PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உணவு பாதுகாப்பு அமைப்பு
ஐ.நா., சபையின் துணை அமைப்புகளில் ஒன்று உணவு, விவசாய கழகம். பட்டினியை ஒழிப்பது, உணவு பாதுகாப்பு அதிகரிப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கம். 1945 அக். 16ல் கனடாவின் கியூபெக் நகரில் தொடங்கப்பட்டது. இதில் 195 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதன் தலைமையகம் இத்தாலியின் ரோம். இது தவிர 130 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. விவசாயம், வனம், மீன்வளம், நிலம், நீர் ஆதாரம் போன்றவற்றை முன்னேற்றுவது பற்றி ஆய்வு நடத்தி உலக நாடுகளுக்கு அறிக்கை அளிக்கிறது. இதன் தற்போதைய இயக்குனர் ஜெனரலாக இருப்பவர் சீனாவின் கியூ டாங்யூ.