/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய சிறுதொழில் தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய சிறுதொழில் தினம்
PUBLISHED ON : ஆக 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய சிறுதொழில் தினம்
இந்தியாவில் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆக. 30ல் தேசிய சிறுதொழில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறுதொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாகவும் விளங்குகிறது. சிறுதொழில் துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2000 ஆக. 30ல் 'எஸ்.எஸ்.ஐ.,' எனும் சிறுதொழில் கொள்கையை மத்திய அரசு தொடங்கியது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.