/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: உயரமான ரயில் நிலையம்
/
தகவல் சுரங்கம்: உயரமான ரயில் நிலையம்
PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உயரமான ரயில் நிலையம்
இந்தியாவில் உயரமான ரயில் நிலையம் மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 7407 அடி உயரத்தில் உள்ளது. இதன் பெயர் ஹூம் ரயில் நிலையம். டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வேயின் கீழ் செயல்படுகிறது. இது 1881 ஏப்.4ல் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. டார்ஜிலிங்கில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது. இரண்டு பிளாட்பார்ம் உள்ளது. ஒரு நாளைக்கு 14 ரயில்கள் நின்று செல்கின்றன. இரண்டு பெட்டிகளை கொண்ட நீராவி ரயிலாக இயக்கப்படுகிறது. இது யுனெஸ்கோவின் உலக பண்பாட்டு சின்னங்கள் பட்டியலிலும் உள்ளது.

