உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 17, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
நீளமான சுரங்கப்பாதை
ஐரோப்பாவை பிரிட்டனுடன் இணைக்கும் விதமாக ஆங்கில கால்வாயின் கீழே சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதன் பெயர் கால்வாய் சுரங்கம். பிரிட்டனின் போக்ஸ்டோன் பகுதியில் இருந்து பிரான்சின் கான்கியூலஸ் வரை உள்ளது. 1987 டிச. 1ல் இதன் கட்டுமான பணி தொடங்கி 1994 மே 6ல் நிறைவு பெற்றது. இதன் நீளம் 50.46 கி.மீ., இது சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 246 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டது. இதுவே நீருக்கடியில் இந்தளவு ஆழத்தில் அமைக்கப்பட்ட உலகின் நீளமான சுரங்கப்பாதை. இது உலகின் மூன்றாவது நீளமான சுரங்க ரயில்பாதை ஆகும்.
