உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 02, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
விளையாட்டு பத்திரிகையாளர் தினம்
விளையாட்டு, உடலுக்கு மட்டும் நல்லதல்ல. உலகையும் ஒருங்கிணைக்கிறது. விளையாட்டு போட்டிகள் தொடர்பான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் விளையாட்டு பத்திரிகையாளர்கள். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது 1924 ஜூலை 2ல் சுவிட்சர்லாந்தில் விளையாட்டுக்கான பத்திரிகையாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் 70வது ஆண்டு நினைவாக 1994 ஜூலை 2ல் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் தொடங்கப்பட்டது. இவர்களது பணியை பாராட்டுவதே இத்தினத்தின் நோக்கம்.
