/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : அதிக ஏரிகள் உள்ள நாடு
/
தகவல் சுரங்கம் : அதிக ஏரிகள் உள்ள நாடு
PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
அதிக ஏரிகள் உள்ள நாடு
பூமியின் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதில் ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமவெளி, மலைப்பகுதி, பாலைவனம், கடலோரம் உட்பட பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஏரிகள் அமைந்துள்ளன. உலகில் 0.1 சதுர கி.மீ., அளவுக்கு மேல், மொத்தம் 14 லட்சம் ஏரிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக 62 சதவீத ஏரிகள் கனடாவில் தான் உள்ளன. இதற்கடுத்து ஏரிகள் அதிகமுள்ள நாடுகளாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஸ்வீடன் உள்ளன. கனடாவில் உள்ள ஏரிகளில் பெரியது 'கிரேட் பீர்' ஏரி. பரப்பளவு 31,130 சதுர கி.மீ. சராசரி ஆழம் 235 அடி. இது உலகில் 8வது பெரிய ஏரி.