உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
சர்வதேச கூட்டுறவு தினம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பில் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் 30 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மக்கள்தொகையில் 12 சதவீதம் பேர் இதில் இணைந்துள்ளனர். 28 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஐ.நா., சார்பில் ஜூலை முதல் சனி (ஜூலை 4ல்) சர்வதேச கூட்டுறவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதியான உலகிற்கு கூட்டுறவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 1761ல் ஸ்காட்லாந்தில் கூட்டுறவு அறிமுகமானது. 1844ல் இங்கிலாந்தில் பருத்தி மில் பணியாளர்கள் 28 பேர் உலகின் முதல் நவீன கூட்டுறவு சங்கத்தை தொடங்கினர்.
