/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய குழந்தைகள் தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய குழந்தைகள் தினம்
PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய குழந்தைகள் தினம்
ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களே எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். எனவே குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத் தருவது பெற்றோர், ஆசிரியரின் கடமை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ. 14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நமது எண்ணங்களை திணிக்காமல், அவர்களது விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப பெற்றோர் செயல்பட வேண்டும்.

