உள்ளடக்கத்திற்கு செல்ல

தகவல் சுரங்கம் : தேசிய பத்திரிகை தினம் மற்றும் உலக சகிப்புத்தன்மை தினம்
தகவல் சுரங்கம் : தேசிய பத்திரிகை தினம் மற்றும் உலக சகிப்புத்தன்மை தினம்
PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
தேசிய பத்திரிகை தினம்
இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4ல் தொடங்கி நவ., 16ல் செயல்பட துவங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவ.,16ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது துாண் பத்திரிகை, ஊடகம். மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதில் பங்காற்றுகிறது. சமூகத்தின் கண்ணாடியாக பத்திரிகையாளர்கள் உள்ளனர்.
உலக சகிப்புத்தன்மை தினம்
* உலகில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சகிப்புத்தன்மை மிக அவசியம். இதை வலியுறுத்தும் விதமாக நவ. 16ல் உலக சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
