/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : சூயஸ் கால்வாய் வரலாறு
/
தகவல் சுரங்கம் : சூயஸ் கால்வாய் வரலாறு
PUBLISHED ON : பிப் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
சூயஸ் கால்வாய் வரலாறு
மத்திய தரைக்கடலை, செங்கடலுடன் இணைப்பது சூயஸ் கால்வாய். இது எகிப்தில் உள்ள செயற்கை கால்வாய். இதன் நீளம் 193.30 கி.மீ. 255 அடி அகலமுள்ளகப்பல் இதில் செல்லலாம். இது 1859ல் தொடங்கி 1869ல் பணி நிறைவடைந்தது. 1869 நவ., 17ல் கால்வாய் திறக்கப்பட்டது. இதனால் ஆசியா - ஐரோப்பா இடையிலான கப்பல் போக்குவரத்தின் துாரம் குறைந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 56 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக செல்கிறது. இது எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. இக்கால்வாயின் வெற்றி, பிரான்சில் பனாமா கால்வாய் உருவாக காரணமானது.

