/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: நாணயம் தயாரிக்கும் இடம்
/
தகவல் சுரங்கம்: நாணயம் தயாரிக்கும் இடம்
PUBLISHED ON : டிச 29, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1950ல் முதன்முறையாக நாணய தயாரிப்பு தொடங்கப்பட்டது. தற்போது ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து, இருபது ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை மும்பை, ஐதராபாத், டில்லி, கோல்கட்டாவில் தயாரிக்கப்படுகின்றன.
எந்த நாணயம் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அதன் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டின் கீழ் உள்ள, வடிவம் வழியாக அறியலாம். ஒரு புள்ளி இருப்பின் அது டில்லி. ‛டைமண்ட்' வடிவம் இருந்தால் மும்பை. நட்சத்திர வடிவம் இருந்தால் ஐதராபாத். குறியீடே இல்லையெனில் அது கோல்கட்டாவில் தயாரிக்கப்பட்டவை.

