உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 04, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
நாளிதழ் வினியோகிப்பவர் தினம்
உலகம் முதல் உள்ளூர் நிகழ்வுகளை மக்கள் அறிய உதவுவது நாளிதழ். மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவது, அறிவை வளர்ப்பது உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த நாளிதழ்களை மழை, குளிர் என பல இடர்பாடுகளை தாண்டி, நம் இல்லங்களில் சேர்ப்பவர்களை பாராட்டும் விதமாக செப். 4ல் நாளிதழ் வினியோகிப்பவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, மார்ட்டின் லுாதர் கிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உட்பட பல அறிஞர்களும் அவர்களது சிறு வயதில் நாளிதழ் வினியோகம் செய்தனர்.
