/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: பெண்களின் ஓட்டுரிமை வரலாறு
/
தகவல் சுரங்கம்: பெண்களின் ஓட்டுரிமை வரலாறு
PUBLISHED ON : ஜன 18, 2026 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெண்களின் ஓட்டுரிமை வரலாறு
உலகில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து. இதை வலியுறுத்தியவர் அந்நாட்டு பெண் கேத்ரின் ஷெப்பர்டு, 32 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஆட்சியாளர்களிடம் வழங்கினார். இதையடுத்து 1893ல் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிட 1919ல் தான் அனுமதி கிடைத்து. தெற்கு ஆஸ்திரேலியா, 1895ல் பெண்களுக்கு ஓட்டுரிமை, தேர்தலில் நிற்க அனுமதி வழங்கியது. 1960ல் உலகில் பாதி நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. இந்தியாவில், அரசியலமைப்பு அமலான போதே அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

