உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
சர்வதேச யோகா, இசை தினம்
* தினமும் யோகாசனம் செய்தால் உடலும், மனதும் இளமையாகவே இருக்கும். யோகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2014ல் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஐ.நா., சபை இத்தினத்தை அங்கீகரித்தது. 'ஆரோக்கிய முதுமைக்கான யோகா' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
*இசைக்கு மயங்காதோர் எவருமில்லை. இசையில் பல வகைகள் உள்ளன. வருங்கால தலைமுறையினரிடம் இசையின் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஜூன் 21ல் உலக இசை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
