PUBLISHED ON : ஜன 19, 2026 03:29 AM

அ நிறம் | அளவு
உலகில் பல்வேறு நாடுகளில் பெண்கள் அதிபராக அல்லது பிரதமராக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் உலகில் இப்பதவியில் நீண்டகாலம் இருந்தவர், ஜெர்மனி பிரதமராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல். இவர் 2005 நவ.22 முதல் 2021 டிச.8 வரை 16 ஆண்டு, 6 நாட்கள் பதவியில் இருந்தார்.
அடுத்து இரண்டாவது இடத்தில் ஐஸ்லாந்து அதிபர் விக்திஸ் பின்போகடோடிர், 1980 ஆக. 1 முதல் 1996 ஆக.1 வரை 16 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் உலகின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரியவர். அடுத்து மூன்றாவது இடத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (15 ஆண்டு, 212 நாட்கள்) உள்ளார்.
