உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
தேசிய பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன.24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2008ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் தற்போதைய இளம் தலைமுறை பெற்றோர்களால் சமூகத்தின் பார்வை மாறத் தொடங்கி இருக்கிறது.
