/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : 'ஆர்க்கிட்' மாநிலம்
/
தகவல் சுரங்கம் : 'ஆர்க்கிட்' மாநிலம்
PUBLISHED ON : ஜன 06, 2026 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
'ஆர்க்கிட்' மாநிலம்
உலகில் பூக்கும் தாவரங்களில் ஒன்று ஆர்க்கிட். இதில் 28 ஆயிரம் வகைகள் உள்ளன. அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. இந்தியாவிலுள்ள 'ஆர்க்கிட்' பூக்களில், 60 சதவீத வகைகள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ளன. இங்குள்ள வெப்பமண்டலக் காடுகள், மலைப்பகுதிகள் 'ஆர்க்கிட்' பூக்களுக்கு உகந்த சூழலை அளிக்கின்றன. இதன் காரணமாக 'இந்தியாவின் ஆர்க்கிட் மாநிலம்' என அருணாச்சல் அழைக்கப்படுகிறது. இதன் மாநில பூ 'பாக்ஸ்டெயில் ஆர்க்கிட்'. சிங்கப்பூரின் தேசிய மலர் 'வாண்டா மிஸ் ஜோகிம்'. இது ஒரு வகை ஆர்க்கிட் பூக்களை சேர்ந்தது.

