/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: குள்ளமானவர், உயரமானவர்
/
தகவல் சுரங்கம்: குள்ளமானவர், உயரமானவர்
PUBLISHED ON : டிச 17, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
குள்ளமானவர், உயரமானவர்
ஆஸ்திரியாவின் ஆடம் ரெய்னர், குள்ளமானவர், உயரமானவர் என பெயரெடுத்தவர். 1899ல் பிறந்த இவர் 18 வயதில் 122.55 செ.மீ., உயரமே இருந்தார். இதனால் முதல் உலகப்போரின் போது, அந்நாட்டு ராணுவ தேர்வில் (குறைந்தது 148 செ.மீ.,) நிராகரிக்கப்பட்டார். ஆனால் அடுத்து அசாத்தியமாக, ஆண்டுக்கு 9 செ.மீ., வளர்ந்தார். 1932ல் 33 வயதில் உயரம் 7 அடி, 2 இன்ச் (218 செ.மீ.,) என இருந்தது. இவரது அசாத்திய வளர்ச்சிக்கு 'பிட்யூட்டரி அடினோமா' பாதிப்புதான் காரணம் என கண்டறிந்த டாக்டர்கள் அதற்கு 'ஆப்பரேஷன்' செய்தனர். 1950ல் அவர் மறையும் போது உயரம் 234 செ.மீ.

