/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்:கண்டங்களை பிரிக்கும் கடல்
/
தகவல் சுரங்கம்:கண்டங்களை பிரிக்கும் கடல்
PUBLISHED ON : பிப் 03, 2026 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டங்களை பிரிக்கும் கடல்
ஆசியா-ஆப்ரிக்கா இடையே அமைந்துள்ளது செங்கடல்.இது வணிகம், சுற்றுலா துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இந்தியப்பெருங்கடலை, செங்கடலில்அமைக்கப்பட்ட சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலுடன் இணைக்கிறது.
இதில் தினமும் பல்வேறு நாடுகளின் 37 சரக்கு கப்பல்கள் சென்று வருகின்றன. சவுதி, எகிப்து, ஜோர்டான், இஸ்ரேல், ஏமன், சூடான், சோமாலியா உள்ளிட்ட நாடுகள் இதன் கரையில் உள்ளன. நீளம் 2250 கி.மீ. அகலம் 355 கி.மீ. பரப்பளவு 4.38 லட்சம் சதுர கி.மீ. சராசரி ஆழம் 1610 அடி. 521 தீவுகள் உள்ளன. உப்பு அதிகமுள்ள கடல்களில் இதுவும் ஒன்று.

