உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
ஒரே எரியும் எரிமலை
இந்தியாவில் உள்ள எட்டு யூனியன் பிரதேசத்தில் ஒன்று அந்தமான் நிகோபர் தீவுகள். இதன் தலைநகர் விஜயபுரம் (பழைய பெயர் போர்ட் பிளேர்). இங்குள்ள 836 தீவுகளில் ஒன்று பாரென் தீவு. இங்கு மக்கள் வாழ்வதில்லை. இதன் பரப்பளவு 8.34 சதுர கி.மீ., நீளம் 3.4 கி.மீ., அகலம் 3.1 கி.மீ., கடற்கரையின் நீளம் 12.38 கி.மீ., இத்தீவில் தான் இந்தியாவில் உள்ள ஒரே உறுதி செய்யப்பட்ட மற்றும் எரியும் எரிமலை இருக்கிறது. இது 1787ல் முதன்முறையாக வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 10 முறையும், கடைசியாக 2025ல் இந்த எரிமலை வெடித்து, சாம்பல் புகை 10 ஆயிரம் அடி உயரம் சென்றது.
