/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: உலக எய்ட்ஸ் தினம்
/
தகவல் சுரங்கம்: உலக எய்ட்ஸ் தினம்
PUBLISHED ON : டிச 01, 2025 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக எய்ட்ஸ் தினம்
உலகில் 2024 கணக்கின்படி, 4.08 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 14 லட்சம் பேர் சிறுவர்கள். இதில் 13 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள். எச்.ஐ.வி., பாதிப்பால் 6.30 லட்சம் பேர் பலியாகினர். எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலகளாவிய சுகாதார
அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.

