PUBLISHED ON : மே 25, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக கால்பந்து, தைராய்டு தினம்
n கால்பந்து விளையாட்டை சிறப்பிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 25ல் உலக கால்பந்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது முதல் சர்வதேச கால்பந்து போட்டி 1924 மே 25ல் நடைபெற்றது. இதன் நுாற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக 2024ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
* தைராய்டு ஒரு சிறிய சுரப்பு. வண்ணத்துப்பூச்சி வடிவில் கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்து கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
