/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: உலக வாழ்விட தினம்
/
தகவல் சுரங்கம்: உலக வாழ்விட தினம்
PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக வாழ்விட தினம்
போர், பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற சூழல்களினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடுகிறது. உலகில் 12.2 கோடி பேர் வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்துள்ளனர். அதிகரிக்கும் நகரமயமாக்கலும் இதற்கு காரணம். உள்நாட்டில் இடம் பெயர்வோர், அகதிகளில் 60% பேர் நகரங்களுக்கு புலம் பெயர்வதால், உள்ளூர் மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான தங்குமிடம் வேண்டி ஐ.நா., சார்பில் அக். முதல் திங்கள் (அக். 6) உலக வாழ்விட தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நகர்ப்புற நெருக்கடிக்கான பதில்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.