/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
/
தகவல் சுரங்கம் : உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
சுனாமியை முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 5ல் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'சுனாமிக்கு தயாராக இருங்கள் : அதற்கான முன்னெச்சரிக்கையில் முதலீடு செய்யுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சுனாமி என்பது ஜப்பானிய மொழி சொல். 'துறைமுகஅலை', 'ஆழிப்பேரலை' என அழைக்கப்படுகிறது. நிலநடுக்கம் கடலில் ஏற்படும் போது சுனாமி உருவாகிறது. உலகில் 100 ஆண்டுகளில் 58 முறை சுனாமி ஏற்பட்டுள்ளது. இதில் 2.60 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

