உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : செப் 06, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
முதல் பெண் சபாநாயகர்
இந்தியாவில் சட்டசபை முதல் பெண் சபாநாயகராக பதவி வகித்தவர் ஷானோ தேவி. காங்., கட்சியை சேர்ந்த இவர் 1966 டிச. 6 முதல் 1967 மார்ச் 17ல் ஹரியானா சட்டசபை சபாநாயகராக பணியாற்றினார். முன்னதாக 1962 மார்ச் 19 முதல் 1966 அக். 31 வரை பஞ்சாப் சட்டசபையில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். இவர் 1901 ஜூன் 1ல் முல்தானில் (தற்போது பாக்.,) பிறந்தார். இந்தியா – பாக்., பிரிவினையின் போது பஞ்சாபில் குடிபெயர்ந்தார். 1951, 1962 என இருமுறை பஞ்சாப் சட்டசபைக்கு எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் தற்போது உத்தரகண்ட், ஒடிசாவில் பெண் சபாநாயகர் உள்ளனர்.
***
