உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு முறை பயணமாக டில்லி செல்லும் போது அங்குள்ள சாணக்கியபுரி பகுதியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது வழக்கம். இது 'வைகை தமிழ்நாடு இல்லம்', 'பொதிகை தமிழ்நாடு இல்லம்' என இரு பகுதியாக உள்ளது. இரண்டுக்குமான இடைவெளி 1.5 கி.மீ., துாரம். வைகை இல்லம் 1962ல் கட்டப்பட்டது. பரப்பளவு 1.757 ஏக்கர். இதில் 49 அறைகள் உள்ளன. கூடுதல் கட்டடமாக அமைக்கப்பட்ட பொதிகை இல்லம் 2004ல் திறக்கப்பட்டது. பரப்பளவு 1.966 ஏக்கர். இதில் 73 அறைகள் உள்ளன.
