/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
/
பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ADDED : ஆக 27, 2010 11:37 PM
வேதாரண்யம்: வேதாரண்யம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் மருதூர் வடக்கு பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் யூனியன் கூட்ட அரங்கில் நடந்தது.
பஞ்சாயத்து தலைவர்கள் துரைராசு, நெடுஞ்சலியன், கிரிதரன், சதாசிவம், பழனியப்பன், சிவகுருபாண்டியன், குமார் உட்பட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர்.
அரசின் வீட்டு வசதி திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்வதை பஞ்சாயத்து நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும்.
ஏழ்மை நிலையில் உள்ள பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்களையும் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட வீடுகளை அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். சாதாரண ஏழைகள் பயன்பெறும் வகையில் கான்கிரீட் வீடு திட்டத்தை வழங்கி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.