தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாட்டிறைச்சியை காட்டி மாணவர்களிடையே மோதல் சூழலை உருவாக்குகிறார் வன்னி அரசு: ஏ.பி.வி.பி.,

மாட்டிறைச்சியை காட்டி மாணவர்களிடையே மோதல் சூழலை உருவாக்குகிறார் வன்னி அரசு: ஏ.பி.வி.பி.,

மாட்டிறைச்சியை காட்டி மாணவர்களிடையே மோதல் சூழலை உருவாக்குகிறார் வன்னி அரசு: ஏ.பி.வி.பி.,


UPDATED : செப் 25, 2026 09:51 AM

ADDED : செப் 25, 2026 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 09:51 AM ADDED : செப் 25, 2026 09:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கினால், பன்றி இறைச்சியும் வழங்க வேண்டும்' என, மாணவர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.

வி.சி.க.,வைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, 'சமூக நீதி மாணவர் விடுதிகளில் சிக்கன், மட்டன் போல் மாட்டிறைச்சியும் வழங்க ஆலோசிக்கப்படும்' என சமீபத்தில் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு, மாணவர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், 'மாட்டிறைச்சியை விரும்பாத மாணவர்களுக்கு, பன்றி இறைச்சி போன்ற அசைவ உணவுகளை வழங்க, அமைச்சர் வன்னி அரசு பரிசீலிக்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளனர். இதனால், சமூக நீதி விடுதிகளில் 'பீப், போர்க்' பிரச்னை உருவாகி உள்ளது.

இது குறித்து, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநிலச் செயலரும், சட்டக் கல்லுாரி மாணவருமான சூர்யா கூறியதாவது:


சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்த கருத்தை, அமைச்சர் வன்னி அரசு திரும்பப் பெற வேண்டும்.

'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் என்ற விவாதம் உருவாகி, மாணவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் வன்னி அரசு இது போன்ற பிரிவினை கருத்துக்களை கைவிட்டு, விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 30ல் ஆர்ப்பாட்டம்

கோவை குனியமுத்துாரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:

தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவதாக அமைச்சர் வன்னி அரசு அறிவித்தது கண்டிக்கத்தக்கது. ஒரு அமைச்சராக வெளியிடும் அறிவிப்பானது, அரசின் கருத்தாகவே கருதப்படும். இது, முதல்வர் விஜய் அரசுக்கு தீங்கு ஏற்படுத்தும்.

எனவே, தன் அறிவிப்பை திரும்பப் பெற்று, பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 30ம் தேதி, வன்னி அரசின் வீடு மற்றும் மாவட்ட தலைமையிடங்களில், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட 12 அரசியல் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us