PUBLISHED ON : மே 09, 2021

* வேப்பம் பூவை உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரில் போட்டு குடித்தால், வயிற்றுப்புண் குணமாகும்
* அதிகாலையில் வெறும் வயிற்றில், வேப்பங் கொழுந்தை தின்றால், வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும்
* வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் அல்லது நெய்யில் வறுத்து உப்பு கலந்த சாதத்துடன் சாப்பிட்டால், ஏப்பமும், வாந்தியும் நின்று விடும்
* வேப்பங் கொழுந்தை அரைத்து, முகத்தில் உள்ள பருக்களில் பூசி வந்தால், பருக்கள் நீங்கி விடும்
* காய்ந்த வேப்ப இலைகளை துாளாக்கி, சாம்பிராணி சேர்த்து புகை போட்டால், வீட்டில் கொசுத் தொல்லை இருக்காது
* சில பெண்களுக்கு முகத்தில் அரும்பு மீசை இருக்கும். வேப்பங் கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் ஆகியவற்றை காய வைத்து, மாவு போல அரைத்து, தினசரி பூசி வந்தால், ரோமங்கள் நீங்கி, மீண்டும் முளைக்காமல் இருக்கும்.
