/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
'சிந்தித்து' தக்காளி பறிக்கும் ரோபோ
/
'சிந்தித்து' தக்காளி பறிக்கும் ரோபோ
PUBLISHED ON : ஜன 22, 2026 07:49 AM

விவசாயத்தில் தக்காளி போன்ற மென்மையான காய்களை சேதமின்றிப் பறிப்பது ரோபோக்களுக்கு பெரும் சவால். இதற்கு தீர்வாக, ஜப்பானின் ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலை விஞ்ஞானிகள், 'சிந்தித்து செயல்படும்' புதிய அறுவடை ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோ, தக்காளியை அடையாளம் காண்பதோ டு நின்றுவிடாமல், பழத்தின் நிலை, காம்பின் வடிவம் மற்றும் இலைகளின் மறைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்கிறது.
பின் இதை, எளிதாகப் பறிக்க முடியுமா என்பதை தீர்மானிக்கிறது. தக்காளிப் பழத்தை 'கண்டறிதல்' என்பதிலிருந்து பறிப்பதற்கு 'முடிவெடுத்தல்' என்ற சிந்தனைத் திறனை ஜப்பானிய விஞ் ஞானிகள் ரோபோவுகுத் தந்துள்ளனர்.
சோதனையில், இது 81 சதவீத துல்லியத்துடன் தக்காளியைப் பறித்துக் காட்டியுள்ளது. ஒருவேளை பழத்தைப் பறிக்கும் முதல் முயற்சி தோற்றால், தன் கரங்களை வேறு கோணத்தில் மாற்றி மீண்டும் பறிக்க முயல்கிறது, இந்த அறுவடை ரோபோ.
இன்னும் சில ஆண்டுகளில், இதுபோன்ற எளிய அறுவடை களை ரோபோக்கள் செய்யும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
அதேநேரம், விளைநி லத்தில் சிக்கலான பணிகளை மனித விவசாயிகள் கவனிப்பர். இதுபோல, ரோபோ-மனி தன் கூட்டாகப் பணி செய்யும் முறை உருவாகும்.
இது உலகளாவிய விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாட்டைப் போக்கி, துல்லியப் பண்ணையத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

