sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/பார்வையிழந்தோருக்கு உதவ வரும் நத்தை

பார்வையிழந்தோருக்கு உதவ வரும் நத்தை

பார்வையிழந்தோருக்கு உதவ வரும் நத்தை


PUBLISHED ON : பிப் 19, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2026 07:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவ அதிசயங்களை நிகழ்த்தும் உயிரினங்கள் என்று ஒரு பட்டியல் உண்டு.

அதில், 'தங்க ஆப்பிள்' நத்தை தற்போது இடம்பிடித்து உள்ளது. இந்த நன்னீர் நத்தை, தனது ஒரு கண்ணை முழுமையாக இழந்தாலும், லென்ஸ், விழித்திரை, பார்வை நரம்பு உட்பட அனைத்தையும், முப்பதே நாட்களில் மீண்டும் வளர்க்கும் திறன் கொண்டது. தவிர, இதன் கண்களின் அமைப்பு, முதுகெலும்புள்ள விலங்குகளின் கண்களை ஒத்திருப்பது ஒரு கூடுதல் பலம்.

எனவே, நத்தை மீண்டும் கண்களை மீளுருவாக்கம் செய்வது எப்படி என்று, 'கிறிஸ்பர்' என்ற மரபணுத் திருத்தத் தொழில்நுட்பம் வாயிலாக விஞ் ஞானிகள் ஆராய்ந்தனர். அந்த சோதனையில், இந்த மீளுருவாக்கத்தின் போது, சில முக்கிய வளர்ச்சி மரபணுக்கள் மீண்டும் உயிர்த்தெழுவது தெரியவந்தது.

காயம் ஆறுதல், செல்கள் விரைவாகப் பெருகுதல் மற்றும் சிக்கலான திசுக்களின் மறுசீரமைப்பு என படிப்படியாக, இந்த உடல் உறுப்பு உருவாக்கம் அரங்கேறுகிறது.

மீண்டும் வள ர்ந்த நத்தையின் கண்கள் முழுமையான பார்வைத்திறனைப் பெற்றுள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன. மனிதக் கண்ணின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அதே மரபணுக்கள், இந்த நத்தைகளிடமும் காணப்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் மனிதர்களின் பார்வைக் குறைபாடுகளைச் சரிசெய்யும் உத்தியை, நத்தைகளிடமிருந்து மருத்துவர்கள் கற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us