sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

படமெடுக்கப்பட்ட அதிசய கேலக்ஸி

/

படமெடுக்கப்பட்ட அதிசய கேலக்ஸி

படமெடுக்கப்பட்ட அதிசய கேலக்ஸி

படமெடுக்கப்பட்ட அதிசய கேலக்ஸி


PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது பிரபஞ்சத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் உள்ளன. நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கேலக்ஸிகளுள் ஒன்று NGC 253. இது பூமியிலிருந்து 1.15 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

கரோலின் ஹெர்செல் எனும் ஜெர்மனிய விண்வெளி ஆய்வாளர் 1783ஆம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தார். இதற்கு வெள்ளிக் காசு கேலக்ஸி, வெள்ளி டாலர் கேலக்ஸி முதலிய பெயர்கள் உள்ளன.

நட்சத்திரங்கள் மிக அதிக அளவில் உருவாகி அழிகின்ற கேலக்ஸிகளுள் இதுவும் ஒன்று. உலக அறிவியல் வரலாற்றில் முதன்முறையாக இதைத் துல்லியமாகப் படமெடுத்துள்ளனர் விஞ்ஞானிகள்.

தென் அமெரிக்க நாடான சிலியின் அடகாமா பாலைவனத்தில் உள்ளது ஐரோப்பிய தெற்கு கோளரங்க ஆய்வகத்தின் (ஈஎஸ்ஓ) மிகப் பெரிய தொலைநோக்கி (விஎல்டி). இதைக் கொண்டு வெள்ளிக் காசு கேலக்ஸியைப் படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தில் 500 நட்சத்திரங்கள் உருவாவது பதிவாகிஉள்ளது.

பொதுவாக ஒரு கேலக்ஸியில் அதிகபட்சம் 100 நட்சத்திரங்கள் உருவாகலாம். அதற்கு மேல் இதுவரை பதிவாகவில்லை. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாம் இப்போது பார்க்கும் இந்த கேலக்ஸியின் படத்தை எடுக்க விஞ்ஞானிகளுக்கு 50 மணி நேரம் தேவைப்பட்டது.

ஏனென்றால் இந்த கேலக்ஸி 65,000 ஒளியாண்டுகள் அகலமானது. ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய கேலக்ஸியைபடமெடுப்பது கடினம். அதனால் இதன் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக 100 படங்கள் பிடித்து அவற்றை இணைத்துள்ளனர்.

வருங்காலங்களில் இந்த கேலக்ஸியில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன, வாயுக்கள் எப்படி நகர்கின்றன என்ற ஆழமான ஆய்வுகள் நடத்தப்படும். இந்த ஆய்வு பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்துத் தெரிந்து கொள்ள உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.






      Dinamalar
      Follow us