தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/பூமியில் பள்ளங்கள் உருவாக விண்கல் காரணமா?

பூமியில் பள்ளங்கள் உருவாக விண்கல் காரணமா?

பூமியில் பள்ளங்கள் உருவாக விண்கல் காரணமா?


PUBLISHED ON : மே 28, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூமி மீது மோதிய விண்கற்களால் உருவான பள்ளங்கள், பூமியின் தொடக்க காலத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளுக்கு புகலிடமாக இருந்திருக்கலாம்.

இது குறித்து, தென் கொரியாவின் புவி அறிவியல் மற்றும் கனிமவள துறையின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். தென் கொரியாவில் உள்ள ஒரே விண்கல் பள்ளமான , 'ஹப்சியோன்' (Hapcheon) பகுதியை அவர்கள் ஆராய்ந்தபோது, அங்கிருந்த பண்டைய வெந்நீர் ஊற்று ஏரிக்குள், பழங்கால நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்ட அடுக்கு பாறை கட்டமைப்புகளான, 'ஸ்ட்ரோமடோலைட்டுகள்' (Stromatolites) கண்டறியப்பட்டன.

விண்கல் மோதியதால் ஏற்பட்ட கடுமையான வெப்பம், அந்த ஏரியை நீண்ட காலத்திற்கு வெதுவெதுப்பாகவும், தாதுக்கள் நிறைந்ததாகவும் வைத்திருந்ததாக ஆய்வு குழு நம்புகிறது. இது, 'சயனோபாக்டீரியா' எனப்படும் நுண்ணுயிரிகள் செழித்து வளர்வதற்கான புகலிடத்தை உருவாக்கியது. இந்த நுண்ணுயிரிகள், ஒளி சேர்க்கை மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆரம்ப கால உயிரினங்களாகும். ஸ்ட்ரோமடோலைட்டுகளுக்குள் இருக்கும் வேதியியல் தடயங்களும், அவை நீண்டகால வெந்நீர் செயல்பாட்டின் போது உருவானதை உறுதிப்படுத்துகின்றன.

'கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்டு என்விரான்மென்ட்' இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், விண்கல் தாக்கங்கள் வெறும் அழிவை ஏற்படுத்துபவை அல்ல என்ற கோட்பாட்டை வலுப்படுத்துகின்றன. 240 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியின் வளிமண்டலம் ஆக்சிஜன் நிறைந்ததாக மாறுவதற்கு முன், இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட பள்ள ஏரிகள், ஆரம்ப கால, 'ஆக்சிஜன் சோலை'களாக செயல்பட்டிருக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us