தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

01. பின்லாந்தில் உள்ள துர்கு பல்கலை, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையுடன் இணைந்து, இதய செயலிழப்பைக் கண்டுபிடிக்கின்ற சென்சார்களுடன் இணைந்து இயங்கும் செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. 1,003 நபர்களை வைத்துச் சோதனை செய்ததில் இந்தச் செயலி, 85 சதவீதம் சரியாக இதய செயலிழப்பைக் கண்டறிந்தது.

Image 1258602


02. கொம்புச்சா எனப்படும் நொதிக்கப்பட்ட டீ பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. தற்போது இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவதாக அமெரிக்காவின் வட கரொலினா பல்கலை கண்டறிந்துள்ளது.

Image 1258603


03. கண் பார்வை இல்லாதவர்கள் சூரிய கிரகணத்தைக் கண்டு உணர முடியாது என்பதால் அவர்கள் கேட்டு உணரும் வகையில் ஒரு கருவியை கேம்பிரிட்ஜ் பல்கலை உருவாக்கியுள்ளது. 'லைட்சவுண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி சூரிய ஒளி அலைகளை இசை ஒலி அலைகளாக மாற்றுகிறது.

Image 1258604


04. எதிர்காலத்தில் நிலவு, விண்கற்கள் முதலிய குறைந்த ஈர்ப்பு விசை உள்ள விண்பொருட்களில் ஆய்வு செய்வதற்காக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் மூன்று கால் ரோபோவை உருவாக்கியுள்ளனர். அடிப்படையான சோதனைகளில் இதில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image 1258605


05. பேஸ்மேக்கர் முதலிய சில கருவிகளை உடலில் பொருத்தும் போது அவை தொடர்ந்து இயங்க பேட்டரி மாற்ற வேண்டும். அதற்காக அவற்றை உடலிலிருந்து வெளியே எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இதைத் தவிர்ப்பதற்காக சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உடலில் உள்ள பிராணவாயுவைக் கொண்டு சார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரியை வடிவமைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us