தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/ஏ.ஐ.,-க்கு பயப்பட வேண்டாம் பயன்படுத்துங்கள்

ஏ.ஐ.,-க்கு பயப்பட வேண்டாம் பயன்படுத்துங்கள்

ஏ.ஐ.,-க்கு பயப்பட வேண்டாம் பயன்படுத்துங்கள்


PUBLISHED ON : பிப் 26, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2026 07:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெமிஸ் ஹசாபிஸ், தலைவர்,- கூகுள் டீப்மைண்ட்

இந்திய மருத்துவத்துறையில் ஏ.ஐ.,


இரண்டு ஏ.ஐ., தொழில்நுட்பங்கள், மருத்துவ உலகில் மாபெரும் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஒன்று 'ஆல்பாபோல்டு' இன்னொன்று, 'ஆல்ஃபா ஜீனோம்!' இன்றுவரை புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க பல பத்தாண்டுகள் ஆகிறது. இதை சில மாதங்களாகக் குறைப்பதே கூகுள் 'டீப்மைண்டின்' ஏ.ஐ., பிரிவின் நோக்கம். இதற்காகவே 'ஐசோமார்பிக் லேப்ஸ்' என்ற துணைப் பிரிவை உருவாக்கினோம்.

இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி ஒப்பந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுடன் (CROs) இந்த ஆய்வகம் இணைந்து செயல்படுகிறது. இது தீவிரமான கூட்டு முயற்சி. எதிர்காலத்தில், இந்திய சுகாதாரத் துறையில் இது மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்திய ஐ.டி., துறைக்கு ஏ.ஐ., தரும் வாய்ப்புகள்


மென்பொருள் மற்றும் இந்தியாவின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐ.டி., ஏற்றுமதித் துறையில் இடையூறுகள் ஏற்படும். எனினும், ஏ.ஐ.,யைக் கண்டு இந்திய மென்பொறியாளர்கள் பயப்படக்கூடாது. மாறாக, ஏ.ஐ.,யை பயன்படுத்த வேண்டும். ஏ.ஐ., கருவிகளை முழுமையாகக் கற்க வேண்டும். தங்கள் அன்றாடப் பணிகளில் இவற்றைத் திறமையாக ஒருங் கிணைக்க வேண்டும். இதன் வாயிலாக ஒரு சாதாரணப் பொறியாளரின் உற்பத்தித்திறனை 10 மடங்கு வரை அதிகரிக்கலாம்.

தனித்துவமான கற்பனைத்திறனும், புதிய சிந்தனைகளை உருவாக்கும் 'ரசனையுமே' ஒரு பொறியாளரை தனித்துக் காட்டும். அதில்தான் இந்திய மென்பொருளாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பன்முகத்திறனும் ஏ.ஜி.ஐ.,யும் (AGI)


நவீன யுகத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகள் எங்கு நிகழ்கின்றன? முற்றிலும் மாறுபட்ட இரண்டு அல்லது மூன்று துறைகள் சந்திக்கும் புள்ளியில்தான் நிகழ்கின்றன. எனவே, மாணவர்கள் ஏதேனும் ஒரு துறையில் மட்டும் சுருங்கிவிடக் கூடாது. பல்துறைகளிலும் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு 'பன்முக அறிஞராக' தங்களை தயார்செய்துகொள்ள வேண்டும். மனித மூளை செய்யும் அனைத்து அறிவாற்றல் திறன்களையும் ஒரு இயந்திரம் வெளிப்படுத்த வேண்டும். இதையே 'பொது செயற்கை நுண்ணறிவு' என்பர்.

இன்றைய ஏ.ஐ., மாடல்கள் அசத்தலான பலவற்றை செய்துகாட்டுகின்றன. ஆனால், மனிதனைப் போல தொடர்ந்து கற்கும் திறன் அவற்றுக்கு இல்லை. ஆக்கப்பூர்வ சிந்தனை, நீண்டகாலத் திட்டமிடல் போன்ற திறன்கள் அவற்றுக்கு இன்னும் பிடிபடவில்லை. மனிதர்கள் தேவையற்ற நினைவுகளை மறக்கின்றனர். முக்கியமானவற்றை மட்டும் நினைவில் கொள்கின்றனர். இதேபோல, ஏ.ஐ.,யின் இடம், பொருள், ஏவல் சார்ந்த நினைவாற்றல், தேடல் திறனை மேலும் திறம்படச் செயல்பட வைக்க வேண்டும்.

எதிர்கால தொழில்நுட்பங்கள்


அடுத்த சில ஆண்டுகளில் நிஜ உலகில் ஏ.ஐ.,யின் நேரடிப் பயன் பாடு பெரும் பாய்ச்சலைச் சந்திக்கும். குறிப்பாக, ரோபோவியல் துறை அபரிமிதமாக வளரும். உலகைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட, 'ஜெமினி' போன்ற பல்லுாடக மாதிரிகள் பயன்பாட்டுக்கு வரும். தா னி யங்கி ஆய்வகங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலக்கும்.

நன்றி: வருண் மய்யா யுடியூப் சேனல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us