தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/குப்பையை அகற்றும் இயந்திரம்

குப்பையை அகற்றும் இயந்திரம்

குப்பையை அகற்றும் இயந்திரம்


PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீர்நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுவது சுலபமாக இல்லை. இதற்காகவே சிறிய படகு போல் இருக்கும் க்ளாஸ் 3 க்ளியர்போட் (Class 3 Clearbot) எனும் ஓர் இயந்திரத்தை ஹாங்காங் பல்கலை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். நீர்நிலைகளின் மேற்பரப்பை மூடி வளரும் ஆகாயத் தாமரை உள்ளிட்ட தாவரங்களையும் இது அகற்றும் என்பது கூடுதல் சிறப்பு. இதைத் துறைமுகம், ஏரி, குளம் ஆகிய எல்லா நீர்நிலைகளிலும் பயன்படுத்த முடியும்.

இந்த இயந்திரம் மிதந்தபடியே அதன் வாய்வழியே குப்பையைச் சேகரிக்கும். இதனால் மணிக்கு 200 கிலோ வரை குப்பையைச் சேகரிக்க முடியும்.

மொத்தம் 500 கிலோ குப்பை வரை இதனால் சுமந்தபடி நீந்தமுடியும். இதில் 3 கிலோவாட் மணிநேரம் (3-kWh) ஆற்றலுடைய பாட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரம் தொடர்ந்து இயங்கும். இதில் சூரிய மின் தகடுகள் பொருத்தும் முயற்சியும் நடந்து வருகிறது.

13.25 அடி நீளமும், 7.5 அடி அகலமும், 5.5- அடி உயரமும் கொண்ட இந்த இயந்திரத்தில், 1080 பிக்ஸல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் தாவரங்களை வெட்டுவதற்கென்று பிரத்யேகமான கத்திகளும் உள்ளன. இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள குப்பையை அகற்ற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us